--- --:--:-- --

தாய், தந்தையை இழந்த விரத்தியால் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்..!

10

ள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் மதுவில் விஷம் கலந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரிஷிவந்தியம் அருகே தகடு கிராமத்தை சேர்ந்தவர் ராகவேந்திரன்.

 

இவரின் பெற்றோர் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் தனது பாட்டியின் அரவணைப்பில் இருந்து வந்துள்ளார். இவர் அதே கிராமத்தில் மளிகை கடை நடத்தி வந்த நிலையில் அரசு தேர்வுக்கு தயாராகி வந்ததாக கூறப்படுகிறது.

 

இதனிடையே ராகவேந்திரனுக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வந்த நிலையில் தாய் தந்தையை இழந்த சோகத்தில் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ராகவேந்திரன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon