பூஜை நடத்துவதாக கூறி அத்துமீறலில் ஈடுபட்ட போலீஸ் சாமியார்..!
ஆண்டிபட்டி அருகே பரிகார பூஜை நடத்த இருப்பதாக கூறி பெண்ணிடம் அத்துமீறிய ஜோதிடர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள காமாட்சி என்ற பெண் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இவர் போடி அருகே உள்ள ஜோதிடரிடம் சென்றுள்ளார். அப்பொழுது செல்வராஜ், பரிகார பூஜை செய்தால் கணவருடன் சேர்ந்து விடுவதாக கூறி 20000 ரூபாய் பணம் பெற்றுள்ளார்.
மேலும் பூஜை செய்வதாக கூறி தனியாக அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்த பொழுது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.





