--- --:--:-- --

பிளேடால் ஓட்டுநரை கிழித்த மாணவன்..!

5

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு பேருந்து ஓட்டுனரின் முகத்தை பிளேடால் கிழித்த பிளஸ் ஒன் மாணவனை பயணிகள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அரக்கோணம் நோக்கி சென்று அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பிளஸ் ஒன் மாணவர் ஒருவர் பயணித்துள்ளார்.

 

பேருந்தை நிறுத்திய ஓட்டுனர் பாலாஜி அந்த மாணவனை உள்ளே வரும்படி கூறியுள்ளார். ஆத்திரமடைந்த மாணவன் ஓட்டுநரை தகாத வார்த்தையால் திட்டுவதுடன் தான் வைத்திருந்த பிளேடால் அவரது முகத்தை கிழித்ததாக கூறப்படுகிறது. தப்பியோட முயன்ற மாணவனை சக பயணிகள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon