--- --:--:-- --

பிப்ரவரி 24ஆம் தேதி சிறப்பு மலர் வெளியிடப்படும் : இபிஎஸ்

6

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்த நாளை ஒட்டி 24ஆம் தேதி சிறப்பு மலர் வெளியிடப்படும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

 

மறைந்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட அதிமுக முடிவு செய்தது. அதன்படி ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி மார்ச் 5, 6, 7 மற்றும் 10, 11 ஆகிய ஆறு நாட்களில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

 

மேலும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75 வது பிறந்த நாளை ஒட்டி 24ஆம் தேதி சிறப்பு மலர் வெளியிடப்படும் எனவும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon