--- --:--:-- --

அதானி பற்றி பேசும்போது பிரதமர் மோடியின் கைகள் நடுங்குகிறது..!

4

நாடாளுமன்றத்தில் அதானி குறித்து பேசினால் பிரதமர் மோடியின் கைகள் நடுங்குவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் வயநாடு சென்ற ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

 

அப்பொழுது பேசியவர் பிரதமர் மோடிக்கும், அதானிக்குமான தொடர்பை நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் என்று கூறினார். பிரதமர் மோடியுடன் சேர்ந்து அதானி வெளிநாடுகளுக்கு பயணம் செய்த போதெல்லாம் அதானிக்கு நாடுகளில் ஒப்பந்தங்கள் கிடைத்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

 

தற்பொழுது 30 சதவீத விமான போக்குவரத்து அதானியின் வசம் இருப்பதாக குறிப்பிட்ட ராகுல் காந்தி, அதானிக்காக பல சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் தான் அதானி குறித்து பேசும்போதெல்லாம் பிரதமர் மோடியின் கைகள் நடுங்குவதாக தெரிவித்தார்.

 

நாடாளுமன்றத்தில் தன் ஆட்சி முறையில் சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ராகுல் காந்தி பிரதமர் மோடி தன்னை நேரடியாக அவமதித்த வார்த்தைகள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon