பேனா சின்னம் வைத்தால் கண்டிப்பாக உடைத்தே தீருவேன் : சீமான்
அதிகாரத் திமிரில் பேனாச் சின்னம் வைத்தால் அதிகாரத்தை கைப்பற்றும் பொழுது அத்துமீறுவோம் என தெரிவித்துள்ள சீமான் கடலில் பேனா சின்னம் வைக்கப்பட்டால் உடைக்கப்படுவது உறுதி என்று மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். செய்தியாளர்களை சந்தித்தவர் அனைத்து தொகுதிகளும் இணைந்து வந்தால் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வந்தால் சாலை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மக்களுக்கு கிடைக்கும் என தெரிவித்தார்.
வீட்டில் தேநீர் போடுவது, தோசை சுடுவது போன்ற பணிகளை செய்து அமைச்சர் தற்பொழுது அதை பொதுவெளியில் செய்து வருவதாக விமர்சித்தார். அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் எப்படி அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் சீமான் கேள்வி எழுப்பினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





