ரயில் முன்பதிவு பெட்டியில் இளைஞர்கள் அடாவடி..!
முன்பதிவு பெட்டியில் வெளி நபர்கள் அமர்ந்து கொண்டு மிரட்டுவதாக கூறி சேலம் மாவட்டத்தில் அபாய சங்கலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்திய பெண்கள் போராட்டம் நடத்தினர்.
எர்ணாகுளத்தில் இருந்து பாட்னா செல்லும் ரயில் பயணிகள், சேலத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் முன்பதிவு செய்து ஏறியுள்ளனர். ஆனால் அவர்கள் இருக்கையில் வேறு சிலர் அமர்ந்திருந்து பெண்களை மிரட்டியுள்ளனர்.
இதில் ஆத்திரமுற்ற அவர்கள் மூவலூர் அருகே செல்லும் பொழுது அபாய சங்கலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். அங்கு சென்ற காவல்துறையினரிடம் முறையிட்ட பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ரயில் நின்றதால் பிற பயணிகள் குழப்பம் அடைந்தனர். வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் முன்பதிவு பெட்டிகளில் அமர்ந்து கொண்டு பயணிகளை மிரட்டும் போக்கு அதிகரிப்பதால் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





