அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம்..!
பாப்பிரெட்டிபட்டி அருகே பட்டா ரத்து செய்யப்படுவதை எதிர்த்தும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த தடை கோரியும் பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடிகள் கட்டிப் போராட்டம் நடத்தினர்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த செட்டியார் நகர் பகுதியில் 5 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அவர்களுக்கு கடந்த 30 வருடங்களுக்கு முன் அரசு சார்பில் பட்டா வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த காமராஜர் என்பவர் பொதுமக்கள் வசித்து வரும் இடம் தனக்கு சொந்தமானது எனக் கூறி வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார்.
இதனால் கடந்த ஐந்து வருடங்களாக இந்த பகுதிக்கு வழங்கப்பட்டு வந்த அடிப்படை வசதிகளை பஞ்சாயத்து நிர்வாகம் துண்டித்து விட்டதாகவும் தங்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்களின் அறிவிப்பை ரத்து செய்ததாகவும் கூறி அந்த பகுதி மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டங்களில் ஈடுபட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





