பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் பேரூராட்சி மன்ற தலைவர் ஆய்வு..!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து பேரூராட்சி மன்ற தலைவர் ஆய்வு மேற்கொண்டார். செஞ்சியில் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி இயங்கி வருகிறது.
இங்கு 65 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் அந்த விடுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அங்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து சாப்பிட்டு பார்த்து மேலும் தரமான உணவு வழங்க வலியுறுத்தினார்.





