--- --:--:-- --

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை தமிழிசை தொடங்கி வைத்தார்..!

4

புதுச்சேரியில் குடும்ப தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை துணை நிலை ஆளுநர் தமிழிசை மற்றும் முதலமைச்சராக ரங்கசாமி தொடங்கி வைத்தனர்.

 

புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து இந்திரா காந்தி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

 

இதன்படி முதற்கட்டமாக 50,000 குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. திட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றிய முதல்வர் ரங்க சாமி மக்கள் எந்த வகையிலும் சிரமப்படக்கூடாது என்ற எண்ணத்தில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என கூறினார்.

 

பின்னர் பேசிய துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பெண்களின் கையில் பணம் இருந்தால் தான் குடும்பத்திற்கு உதவிகரமாக இருக்கும் என்று தெரிவித்தார். இந்தியாவிலேயே முதன் முறையாக இந்த திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது என்றும் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

 

Right Menu Icon