டெம்போ வேன் விபத்து – குழந்தை உட்பட இருவர் பலி
புதுச்சேரி மாநிலம் சாரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். அவரும் அவரது குடும்பத்தார் தமிழரசி, வினோதினி, விக்னேஸ்வரன் அலியோன், விலானி உட்பட ஆறு பேர் பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகின்றனர்.
அவர்கள் தற்போது விடுமுறைக்காக சொந்த நாட்டிற்கு வந்துள்ளனர். இந்த நிலையில் அவர்கள் இன்று சென்னையில் இருந்து அவர்களது சொந்த ஊரான புதுச்சேரிக்கு டெம்போ வேனில் சென்றுள்ளனர்.
அப்போது விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே வேன் சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் திடீரென ஓட்டுநர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததால் வேன் சரமாரியாக ஓடி சாலையோரம் உள்ள தடுப்பு கம்பியில் மோதி விபத்துக்குள்ளானது.
அந்த விபத்தில் சாலையோர கம்பி டெம்போ வேனின் நடுவே கிழித்துக்கொண்டு பின்பக்கம் 50 அடிக்கும் மேல் சென்றது. அந்த விபத்தில் வேனில் பயணித்த ஓட்டுனர் உட்பட ஒன்பது பேரும் பலத்த காயமடைந்தனர். மேலும் வாகனத்தின் குறுக்கே உள்பக்கமாக சாலையோர கம்பி சொருகி கொண்டதால் சிலர் வாகனத்தின் உள்ளேயே இடுப்பாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
அந்த விபத்தில் குழந்தை உட்பட இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.






