பீகாரில் வந்தே பாரத் ரயில் மீது கல்வீசி தாக்குதல்..!
பீகாரில் வந்தே பாரத் ரயில் மீது கல்வீசி தாக்குதலில் ஜன்னல் கண்ணாடி நொறுங்கியது. பீகார் மாநிலத்தில் இன்று காலை வந்தே பாரத் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது ரயில் மீது மர்ம நபர்கள் கற்களை வீசினர்.
இதில் ரயிலின் ஒரு பெட்டி ஜன்னல் கண்ணாடி நொறுக்கியது. நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு மேற்கு வங்க மாநிலத்தில் புதிதாக தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயில் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.





