--- --:--:-- --

தன்னைக் கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த விவசாயி..!

8

சிவகங்கையில் தன்னை கடித்த நல்ல பாம்பை கொன்றுவிட்டு பாம்பை எடுத்து மருத்துவமனைக்கு வந்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம் கீழ் பூங்கோர் பகுதியை சேர்ந்தவர் அழகு.

 

இவர் தனது வயலில் விவசாய வேலை செய்து கொண்டிருந்த பொழுது சுமார் 7 அடி நீளமுடன் நல்ல பாம்பு கையில் கடித்துள்ளது. இதையடுத்து பாம்பை அடித்துக் கொன்றுவிட்டு பாம்பை கையில் எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார்.

 

இந்த சம்பவம் மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Right Menu Icon