--- --:--:-- --

இராமநாதபுரம் மாவட்டத்தில் கிராமசபை விழிப்புணர்வு பரப்புரை !

3bdae6cd-d250-49ba-9935-6144af26c0f1

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக இராஜசிங்கமங்கலம் ஒன்றியம் புல்லமடை ஊராட்சிக்குட்பட்ட இராமநாதமடை கிராமத்தில் கிராம சபை விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. கிராமசபையின் அவசியத்தை பற்றியும், நமது கிராமங்களுக்கு தேவையானவற்றை எப்படி தீர்மானமாக நிறைவேற்றுவது பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் இராமநாதமடை கிராம இளைஞர்கள் வரும் ஆகஸ்ட்15 அன்று நடைபெறும் கிராமசபையில் கட்டாயம் கலந்துகொள்வோம் என உறுதியளித்தனர்.இந்த விழிப்புணர்வு பரப்புரையில் இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன், இராஜசிங்கமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் ஆசிரியர் பாதுஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Right Menu Icon