கழிவறையை சுத்தம் செய்ய சொல்லும் ஆசிரியர்கள்..!
கோவில்பட்டி அருகே கிளவிபட்டி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்ய சொல்வதாக கூறி பள்ளிக்கு பூட்டு போட்டு மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர்.
இப்பள்ளியில் 33 மாணவ, மாணவிகள் பயின்று வரும் நிலையில் தலைமையாசிரியர் உட்பட ஆறு ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இந்நிலையில் தலைமை ஆசிரியரும் மற்றும் சில ஆசிரியர்களும் மாணவர்களும் கழிவறையை சுத்தம் செய்ய சொல்வதோடு ஆசிரியர்கள் கழிவறையை பயன்படுத்த தண்ணீர் எடுத்து வர சொல்வதாகவும் மாணவர்களை அவதூறான வார்த்தைகளால் திட்டுவதாகவும் கூறி ஆசிரியர்களை பள்ளிக்கு உள்ளே விடாமல் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.





