--- --:--:-- --

பாதுகாப்பு பணிக்கு சென்று திரும்பிய காவலருக்கு நேர்ந்த துயரம்…!

3

டலூர் அருகே பாதுகாப்பு பணிக்கு சென்று திரும்பிய காவலர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பண்ருட்டி அடுத்த மாணிக்கம் எஸ்கே பாளையம் கிராமத்தை சேர்ந்த இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருப்பதற்காக பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

 

இந்நிலையில் இரவு பாதுகாப்பு பணிக்கு சென்று திரும்பிய பொழுது எதிர் பாரத விதமாக ரோந்து வாகனம், சாலையில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது.

 

இதில் வாகன இடுக்கில் சித்திய காவலர் சதீஷ்குமார் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். உயிரிழந்த காவலர் சதீஷ்குமார் உடலை பார்த்து உறவினர்கள் காவலர்கள், கண்ணீர் மல்க கதறி அழுதனர்.

 

Right Menu Icon