--- --:--:-- --

அனைத்து நகர பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசமாக பயணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஈபிஎஸ்

3

கர பேருந்துகள் அனைத்திலும் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர் கட்சி தலைவர் பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

 

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய எதிர் கட்சி தலைவர் பழனிச்சாமி நகர பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பெண் பின்புறம் பூசப்பட்டுள்ள பேருந்தில் மட்டுமே கட்டணம் இல்லாமல் பயணம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்படுவதாக கூறினார்.

 

அனைத்து நகர பேருந்துகளிலும் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

இதற்கு பதில் அளித்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அனைத்து நகர பேருந்துகளிலும் மகளிர் இலவசமாக பயணம் மேற்கொண்டு வருவதாகவும் இலவச பயணத்தை எளிமையாக்கவே பேருந்துகளுக்கு பிங்க் வண்ணம் பூசப்படுவதாகவும் தெரிவித்தார். பேருந்தில் பெண்கள் பயணம் செய்வது 24 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். தேவைப்பட்டால் எதிர்க்கட்சி தலைவருடன் ஆய்வு மேற்கொள்ள தயாராக இருப்பதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

 

Right Menu Icon