--- --:--:-- --

வெளிநாட்டு வாழ் இந்தியர்களே உண்மையான தூதர்கள் என நிர்மலா சீதாராமன் பரபரப்பு பேச்சு..!

9

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் கடந்த ஆண்டிலிருந்து இந்தியாவிற்கு அனுப்பி வைத்த பணம் சுமார் 8 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

 

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின மாநாடு மத்திய பிரதேசம் ஹிந்தூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளிநாடு வாழ் இந்தியர்களே நாட்டின் உண்மையான தூதர்கள் என்று கூறினார்.

 

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை அவர்கள் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்றும் அதன் மூலமாக இந்திய பொருட்களும் சேவைகளும், சர்வதேச அளவில் பிரபலம் அடையும் எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்தியாவில் செயல்படும் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

 

வெளிநாடு வாழ் இந்தியர்கள் கடந்த ஆண்டு இந்தியாவிற்கு அனுப்பி வைத்த பணம் சுமார் 8 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. எனக் கூறிய நிர்மலா சீதாராமன் இது கடந்த 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 12 சதவீதம் அதிகம் என தெரிவித்தார்.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon