--- --:--:-- --

அரசு உதவி பெறும் பள்ளி கழிப்பறையில் மாணவியை கடித்த பாம்பு..!

10

குடவாசல் அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவியை பாம்பு கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள செம்மங்குடி கிராமத்தில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது.

 

இந்த பள்ளியில் படித்து வரும் மாணவி நேற்று கழிவறைக்கு சென்ற பொழுது கழிவறையில் இருந்து பாம்பு மாணவியை கடித்துள்ளது. இதனால் மாணவியர் எடுத்து துடித்துள்ளார்.

 

உடனே சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவியை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து குடவாசல் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon