பள்ளி மாணவ, மாணவிகள் மீது மோதிய வாகனம்..!
கேரள மாநிலம் திருச்சூரில் தறிக்கெட்டு ஓடிய மினி சரக்கு வாகனம் ஓடி பள்ளி மாணவிகள் ஆறு பேர் காயமடைந்தனர். பள்ளி முடிந்து மாணவ, மாணவிகள் சிலர் சாலையோரம் நடந்து சென்றனர்.
அப்பொழுது பின்னால் வந்த மினி சரக்கு வாகனம் அவர்கள் மீது மோதியது. சக்கர நாற்காலியில் சென்ற மாற்றுத்திறனாளி உட்பட ஆறு பேர் காயம் அடைந்தனர். அந்த பகுதியினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.






