--- --:--:-- --

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு..!

5

திருப்பூர் கள்ளம்பாளையம் பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் கள்ளம்பாளையம் ஆற்றுங்கரையோரம் உள்ள பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

 

தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் பயன்படுத்தப்படாத கட்டிடத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் இருப்பதை கண்டனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் உடற்குறைவுக்காக அனுப்பி வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

 

விசாரணையில் அஜித் குமார் என்பவரது உடல் என தெரிய வந்தது. காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon