ஆர்டர் செய்த உணவு கெட்டுப் போயிருந்ததால் வாடிக்கையாளர்கள் செய்த செயல்..!
ஆவடியில் தனியார் உணவகத்தில் வாங்கப்பட்ட உணவு கெட்டுப் போனதாக புகார் எழுந்த நிலையில் பொது உணவு பாதுகாப்பு சான்றிதழ் காலாவதியானது தெரிய வந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் பெண் ஒருவர் ஆவடியில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில் சாப்பாடு ஆர்டர் செய்துள்ளார்.
மேலும் உணவை பார்த்த பொழுது வெள்ளை சாதம் கெட்டுப் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை பெரிதுபடுத்த வேண்டாம் என சமாதானம் பேசப்பட்ட நிலையில் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் உணவகத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது உணவகத்தில் உணவு பாதுகாப்பு உரிமம் கடந்த ஆகஸ்ட் மாதமே காலாவதியாக இருப்பதை கண்டுபிடித்து உணவகத்திற்கு நோட்டீஸ் வழங்கினர்.






