--- --:--:-- --

இலவச துணிக்கு பதில் பணம் வழங்க ஒப்புதல்..!

5

புதுச்சேரியில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச துணிக்கு பதில் பணம் வழங்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

 

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் இலவச துணிக்கு பதிலாக வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி பட்டியல் பிரிவினர், மீனவர்கள், நெசவாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி அல்லாத தனிநபர் சிவப்பு நிற குடும்ப அட்டைக்கு 500 ரூபாயும், ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களை கொண்ட சிவப்பு நிற அட்டைகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon