சேமிப்பு தொகைக்காக கள்ள காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி..!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சேமிப்பு தொகைக்காக ஆசைப்பட்டு கணவரை கொலை செய்த மனைவியும் அவரது காதலனும் கைது செய்யப்பட்டனர்.
வெட்டுக் காயங்களோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வியாபாரி ராமர் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் அருண்குமார் என்ற நபர் சரணடைந்தார். ராமரின் மனைவிக்கும் தனக்கும் தொடர்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சேமிப்பு கணக்கிற்கு ஆசைப்பட்டு அவரை ,கொல்ல முயன்றதையும் கூறியுள்ளார். இதனையடுத்து அருண்குமாரையும், ராமரின் மனைவியும் கைது செய்யப்பட்டனர்.





