பிளஸ் டூ மாணவர்களுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட்..!
பிளஸ் டூ பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று பிற்பகல் 2 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை இயக்கம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான பிளஸ் டூ பொதுத்தேர்வு அடுத்த மாதம் மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மூன்றாம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு 8 லட்சம் பேர் பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுத உள்ளனர். அதன்படி பிளஸ் டூ மாணவர்களுக்கு அடுத்த மாதம் செய்முறை தேர்வு தொடங்குவதால் ஹால் டிக்கெட் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.
ஹால் டிக்கெட் இன்று பிற்பகல் 2 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.






