டாஸ்மாக் பாரில் ரூ 25,000 கொள்ளை..!
ஆம்பூரில் அரசு மதுபான கடையில் டாஸ்மாக் பாரின் பூட்டை உடைத்து 25 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. புறவழிச் சாலையில் இயங்கி வரும் இந்த பாரில் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த சிசிடிவி கேமராவை சேதப்படுத்தி உள்ளனர்.
தொடர்ந்து பாரின் பூட்டை உடைத்து 25 ஆயிரம் ரூபாய் திருடி சென்றுள்ளனர். பாரை திறக்க வந்த பணியாளர்கள் திருடு போனதை பார்த்து அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





