பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் பெரியார் 1000 வினா விடை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது!
இராமேசுவரம் வேர்க்கோடு புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில், திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் பெரியார் ஆயிரம் வினாவிடை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு முதல் பரிசு இரண்டாம் பரிசு மூன்றாம் பரிசு முறையாக பதக்கமும் ரொக்கமும் வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கங்களை பள்ளியின் தாளாளர் அருட்தந்தை எப்.தேவசகாயம் வழங்கினார் ரொக்க பரிசுகளை திராவிடர் கழகத்தின் மண்டல தலைவர் கே எம் சிகாமணி வழங்க, மாவட்ட திக தலைவர் முருகேசன் சான்றிதழ்களையும் ஆறுதல் பரிசுகளையும் வழங்கினார். உடன் தங்கச்சிமடம் ஒன்றிய கவுன்சிலர் பேரின்பம், கவுன்சிலர் உஷாலட்சுமி முத்துக்கருப்பன்,சமூக ஆர்வலர் தில்லை பாக்கியம், திமுக பிரதிநிதி நம்புகுமார், பொறியாளர் ரவி, மதிமுக கெவின்குமார் நிகழ்வில் கலந்துகொண்டனர்.மேலும் பள்ளி முதல்வர் எஸ்.சூசைரத்தினம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி சிறப்பித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




