--- --:--:-- --

அறையை சுத்தம் செய்ய வந்த பெண்ணிடம் அத்துமீறிய வருமானவரித்துறை அதிகாரி கைது..!

10

லுவலக அறையை சுத்தம் செய்ய வந்த பெண்ணிடம் அத்துமீறிய புகாரில் வருமானவரித்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் அண்ணாநகரை சேர்ந்த ஒரு நபர் மூத்த வரி விதிப்பதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.

 

கடந்த 14ஆம் தேதி தனது அறையை சுத்தம் செய்ய வந்த தூய்மை பணியாளரிடம் அவர் அத்துமீறியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்ததோடு நடந்ததை பெரிது படுத்த வேண்டாம் என அவர்கள் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

 

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிகிச்சைக்கு பிறகு பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon