காதலன் ஏமாற்றியதாக இளம் பெண் புகார்..!
சென்னையில் தன்னை ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக காதலன் மீது காதலி புகார் அளித்துள்ளார். சென்னையை சேர்ந்த இளம் பெண் ஒருவரும் சதீஷ் என்பவரும் கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் இளம் பெண் கருவுற்ற நிலையில் வேறொரு பெண்ணை சதீஷ் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை சதீஷ் மறுத்துள்ளார். இது குறித்து அயனாவரம் மகளிர் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





