தமிழ்நாட்டில் ஐந்து நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு..!
தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்தை தாழ்வு பகுதி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ஐந்து நாட்களுக்கு தமிழகம் புதுவை மற்றும் காரைக்காலின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்க கடல் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று வீசப்படும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





