--- --:--:-- --

14 மணி நேரம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 16 வயது சிறுமி..!

5

மகாராஷ்டிராவில் 16 வயது சிறுமி ஒருவரை 14 மணிநேரம் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த எட்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். காவல் நிலையத்தில் 16 வயது சிறுமி ஒருவர் புகார் அளித்துள்ளார். பங்களாவில் வைத்து எட்டு பேர் கொண்ட கும்பல் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார்.

 

வெள்ளிக்கிழமை இரவு 8:00 மணியிலிருந்து சனிக்கிழமை காலை 10 மணி வரை பங்களாவிலும் அருகில் உள்ள கடற்கரையிலும் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார்.

 

கூட்டு பாலியில் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த எட்டு பேரையும் கைது செய்துள்ளனர். 16 வயது சிறுமியை எட்டு பேர் கொண்ட கும்பல் 14 மணிநேரம் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon