தமிழகத்தில் வரிவசூல் அதிகமாக இருப்பது மகிழ்ச்சி : நிர்மலா சீதாராமன்
தமிழகத்தில் வரிவசூல் அதிகமாக இருப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என விரும்புவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா நகரில் உள்ள மத்திய வருவாய் குடியிருப்பவளாகத்தில் வருமான வரித்துறை மற்றும் சுங்கத்துறை அலுவலர்களுக்கு கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்.
தொடர்ந்து பின்னர் விழாவில் பேசிய மத்திய அமைச்சர் வரிவசூல் அதிகமாக இருப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வேண்டும் என விரும்புவதாக தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





