--- --:--:-- --

மன உளைச்சலுக்கு உள்ளான விமான பயணிக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு..!

1

சென்னையை சேர்ந்த பயணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்காக ரூ.50,000 இழப்பீடு வழங்க எமிரேட்ஸ் விமான நிறுவனத்திற்கு நுகர்வோர் குறைதீராணையம் உத்தரவிட்டுள்ளது.

 

சிவா என்பவர் கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை திரும்புவதற்காக துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அவசர மருத்துவ காரணங்களுக்காக சிலர் செல்ல வேண்டியுள்ளதால் அவரை இரவு விமானத்தில் செல்லும்படி கேட்டுக்கொண்ட எமரேட்ஸ் விமான நிறுவனம் திடீரென மதிய விமானத்திலேயே செல்லும்படி நிர்பந்தித்ததாக கூறப்படுகிறது.

 

இதனையடுத்து அவர் ஒன்றரை லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை மாவட்ட குறைதீராணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து ஐம்பதாயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என எமிரேட்ஸ் விமான நிறுவனத்திற்கு நுகர்வோர் குறைதீராணையம் உத்தரவிட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon