--- --:--:-- --

நோயாளியுடன் சென்ற ஆம்புலன்ஸ் புளிய மரத்தின் மீது மோதி விபத்து..!

6

திருவாரூர் அருகே ஆம்புலன்ஸ் புளிய மரத்தின் மீது மோதிய விபத்தில் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை நோக்கி நோயாளியுடன் ஆம்புலன்ஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.

 

அப்போது திருனை என்ற பகுதியில் சென்ற பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த புளிய மரத்தின் மீது மோதி விபத்திற்கு உள்ளானது.

 

இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளராகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் படுகாயம் அடைந்த இரண்டு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

மேலும் நோயாளியை வேறு ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon