--- --:--:-- --

பெங்களூருவில் மூன்று நாட்கள் நடைபெறும் ஜி20 மாநாடுகள் பிரதிநிதிகள் முதல் உயர்மட்ட கூட்டம்..!

2

ந்தியாவின் ஜி 20 தலைமைத்துவத்தின் கீழ் முதலாவது நிதி மற்றும் மதிய வங்கி பிரதிநிதிகள் கூட்டம் பெங்களூருவில் இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற இருக்கிறது. கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில் அது தொடர்பான மாநாடு அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.

 

இதை ஒட்டி இந்தியாவின் முதல் முறையாக ஜி-20 நாடுகளின் நிதி மற்றும் மத்திய வங்கிகளின் பிரதிநிதிகளின் முதல் உயர்மட்ட கூட்டம் பெங்களூருவில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தை மத்திய நிதி அமைச்சரும், ரிசர்வ் வங்கியும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கிறது.

கூட்டத்தில் மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலர் அஜய், ஆர்பிஐ துணை ஆளுநர் மைக்கேல் பத்ரா மற்றும் ஜி 20 நாடுகள் இந்தியா அழைத்துள்ள சர்வதேச அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

 

உலக பொருளாதாரப் பிரச்சினைகள் சர்வதேச நிதியில் கட்டமைப்பு வளர்ச்சி, உலக சுகாதாரம், சர்வதேச வரைவறிக்கை உள்ளிட்ட நிதித்துறை சார்ந்த பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற மையப்பொருளில் குழு விவாதம், கருத்தரங்கம் போன்ற நிகழ்வுகளுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

 

Right Menu Icon