ஆதார் எண்ணுடன் தொலைபேசி எண்ணை இணைத்திடுக : வேளாண் துறை
பிரதம மந்திரியின் கிஷான் திட்டத்தில் பயன் பெறும் விவசாயிகள் வரும் 15ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணுடன் தங்களது கைபேசி எண்ணை இணைக்க வேண்டும் என வேளாண்மைதுறை மற்றும் தபால் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
விவசாயிகள் தொடர்ந்து நிதி உதவி பெறுவதற்கு விரைவாக பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தபால் அலுவலகங்கள், தபால் காரர்களை அணுகி ஆதார் உடன் கைபேசி எண்ணை இணைத்து பயன்படுத்தலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.





