டிஜிபி அலுவலகத்தில் கார் மீது விழுந்த மரம்..!
மாண்டஸ் புயல் காரணமாக பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. டிஜிபி அலுவலகம் அருகே மரம் ஒன்று வேரோடு சாய்ந்ததால் சாலையில் நின்ற கார் சேதமடைந்துள்ளது. புயல் கரையை கடந்தாலும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடுமையான பாதிப்பை உருவாக்கியுள்ளது.
சென்னையில் இருக்கக்கூடிய அனைத்து பிரதான சாலைகள் மற்றும் இணைப்பு சாலைகளில் மழைநீர் முழுவதுமாக சூழ்ந்துள்ளது. புயல் கரையை கடக்கும் பொழுது அதிக அளவு காற்றின் வேகம் இருந்தால் டிஜிபி அலுவலகத்தில் கார் மீது மரம் வேரோடு முறிந்து விழுந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





