--- --:--:-- --

அரசு கட்டிடத்தில் கிடந்த ஆண் சடலம் கொலையா? தற்கொலையா?

10

சென்னை பெரியமேடு அருகே அரசு கட்டிடத்தில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரியமேடு மின்சார பார்வையாளர் அலுவலகத்தின் கட்டடத்தின் மேல் கழுத்து இறுக்கப்பட்டு இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.

 

தகவல் அறிந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் திருவெற்றியூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஆன கோபிநாத் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்த போலீசார் இது தற்கொலையா? கொலையா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon