--- --:--:-- --

பட்டியலின மக்களுக்கு முடித்திருத்தம் கிடையாது எனக் கூறியவர் கைது..!

19

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பட்டியலின மக்களுக்கு முடி திருத்தம் செய்யாமல் கடையை மூடி சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கிடாமங்கலம் பகுதியில் இரட்டை குவளை முறை பின்பற்றி வருவதாகவும் பட்டியலின மக்களுக்கு முடி திருத்தம் செய்யக்கூடாது மற்றும் கடைகளில் பொருட்கள் இருக்கக் கூடாது என ஊர் கட்டுப்பாடு விதித்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் பட்டியலின மக்களுக்கு முடித்திருத்தம் செய்யாமல் கடையை மூடி சென்ற வீரமூர்த்தி என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon