--- --:--:-- --

தலைமுடிகளை வெட்டி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள்..!

18

கேரளாவில் ஈவ் டீசிங் செய்து தாக்கப்பட்டதற்கு எதிராக கல்லூரி மாணவிகள் தலைமுடிகளை வெட்டி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

 

கோட்டையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவரும், அவரது தோழியும் நடந்து செல்லும் பொழுது கிண்டல் அடித்த மூன்று மாணவர்கள் அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்து இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

 

இந்த நிலையில் மாணவியையும் அவரது நண்பரையும் கிண்டல் செய்து தாக்கியதாக கூறி சங்க கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி வளாகத்தில் திரண்ட அவர்கள் தலைமுடியை துண்டித்தனர்.

 

தங்களை சக மனிதர்களாக மதிக்க வேண்டும் என்று குற்றம் சாட்டினர். மூன்று மாணவிகளை போலீசார் கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon