--- --:--:-- --

ஷ்ரத்தாவை கொலை செய்தது சரி என வீடியோ வெளியிட்ட நபர் கைது..!

26

டெல்லியில் இளம்பெண் கொலையை நியாயப்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்ட நபரை போலீசார் கைது செய்தனர். இளம்பெண் ஷ்ரத்தா கொலை செய்யப்பட்டு உடலை 35 துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் நாட்டை உலுக்கியது.

 

கொலையாளி கைது செய்யப்பட்டு தற்பொழுது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இளம்பெண் கொலையை நியாயப்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்ட நபரை போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர்.

 

விசாரணையில் அவர் விகாஷ் குமார் என்பது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விகாஷ்குமார் மீது திருட்டு உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Right Menu Icon