--- --:--:-- --

பரிகார பூஜைக்காக பாம்பு புற்றில் நாக்கை நீட்டியரை கொத்திய பாம்பு..!

27

னவில் பாம்பு வந்ததால் பயத்தில் பாம்பு புற்றுக்கு பரிகார பூஜை செய்தவர் நாக்கை பாம்பு கொத்தி, நாக்கை பறிகொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த ராஜா என்பவருக்கு அடிக்கடி பாம்பு கொத்துவது போல கனவு வந்துள்ளது.

 

இது போன்ற கனவுகள் வராமல் இருக்க ஜோஷியரிடம் சென்றுள்ளார். அப்பொழுது ஜோசியர் நாகதோஷம் உள்ளதால் பாம்பு புற்றுக்கு பரிகார பூஜை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். பாம்புகள் கனவில் வந்தால் புற்று அருகே நாக்கை நீட்டி பரிகாரம் செய்ய வேண்டும் என சொல்லியதாக தெரிகிறது.

 

ஜோசியரின் அறிவுறுத்தலின்படி ராஜா பாம்பு புற்றுக்கு பூஜை செய்துள்ளார். அப்பொழுது ராஜா பாம்பு பற்றி அருகே அமர்ந்து நாக்கை நீட்டி பூஜை செய்தபோது எதிர்பாராத விதமாக பாம்பு புற்றில் இருந்து வெளியே வந்த பாம்பு ராஜாவின் நாக்கில் கொத்தி உள்ளது.

 

இதனால் அலறி துடித்து மயங்கி விழுந்தவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon