பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் திரிபாதி ஆஜர்..!
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு அளித்த புகார் தொடர்பான வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற காவல் துறை டிஜிபி திரிபாதி ஆஜரானார். தமிழக காவல்துறையின் சிறப்பு டிஜிபியாக இருந்தவர் பாலியல் தொந்தரவு அளித்ததாக பெண் எஸ்பி ஒருவர் கடந்தாண்டு புகார் அளித்திருந்தார்.
இது தொடர்பான வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் விசாரணைக்கு வந்த பொழுது ஆர்எஸ்எஸ் தரப்பு சாட்சியங்களில் ஒருவரான ஓய்வு பெற்ற காவல் துறை டிஜிபி திரிபாதி சுமார் 5 மணி நேரம் அவரிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது.
இதேபோல புகாருக்கு உள்ளான முன்னாள் சிறப்பு டிஜிபி முன்னாள் எஸ்பி கண்ணன் ஆகியோரும் நேரில் ஆஜரானதை அடுத்து அடுத்த கட்ட விசாரணை வரும் 30-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





