வயது முதிர்வால் இறந்த தாய்…துக்கம் தாங்காமல் உயிரை விட்ட மகள்..!
கன்னியாகுமரி அருகே இறுதி சடங்கின் போது இறந்த தாயின் மார்பில் சாய்ந்து மகளும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே காத்தாடி மூக்கு பகுதியை சேர்ந்தவர் வேலம்மாள்.
ஆசிரியராக பணியாற்றிய இவர் ஓய்வுக்கு பிறகு மகள் பகவதி அம்மாள் வீட்டில் வசித்து வந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் வீட்டில் திடீரென மயங்கி விழுந்து வேலம்மாள் உயிரிழந்தார்.
இதனையடுத்து உறவினர்களுக்கு தெரியப்படுத்தி வேலம்மாள் உடலை அடக்கம் செய்வதற்கான இறுதி சடங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. வேலம்மாள் உடல் அருகே தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்த மகள் பகவதி அம்மாள் திடீரென தாய் மீது மயங்கி விழுந்தார்.
உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்த பொழுது ஏற்கனவே பகவதி அம்மாள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தாயின் இறப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் அவரை மார்பின் மேல் சாய்ந்து மகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





