--- --:--:-- --

பயங்கரவாதத்தை எந்த மதத்துடன் தொடர்புபடுத்த கூடாது..!

1

அப்பாவி மக்களின் உயிரை பறிக்கும் செயல்களை நியாயப்படுத்தும் எந்த காரணத்தையும் ஏற்க முடியாது என தீவிரவாத உறுப்பு மாநாட்டில் உள்துறை அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்று வரும் சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று உரையாற்றினார்.

 

அதில் பயங்கரவாதம், உலகளாவிய அமைப்பு மற்றும் பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு உதவி செய்வது பயங்கரவாதத்தை விட ஆபத்தானது எனவும் அதன் மூலமே பயங்கரவாதம் வளர்கிறது எனவும் கூறினார்.

 

இளைஞர்களை தீவிரவாதத்திற்கு பயன்படுத்தி வன்முறையை ஊக்குவிப்பவர்கள் தங்கள் அடையாளங்களை மறைக்கவும் கொள்கைகளை பரப்புவதாகவும் கூறினார். அத்தகைய நபர்களின் கிட்டோ கரன்சி போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்து வருவதாக கூறினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon