--- --:--:-- --

பழுதான அரசு பேருந்தை தள்ளிச் செல்லும் மாணவர்கள்..!

5

வேலூர் மாவட்டத்தில் பழுதான அரசு பேருந்தை பள்ளி மாணவர்கள் தள்ளி செல்லும் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. குடியாத்தத்தில் இருந்து செல்லும் அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் பலர் பயணம் மேற்கொண்டனர்.

 

அப்பொழுது அரசு பேருந்து திடீரென பழுதானதால் பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் பேருந்தை தள்ளி சென்றனர். இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில் பள்ளி நேரங்களில் கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon