ஆன்லைன் விளையாட்டு தடை சட்டம் : வழக்குகள் வாபஸ்
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. தமிழக அரசு ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த அக்டோபர் மாதம் அவசர சட்டம் இயற்றியது.
இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி மும்பையை சேர்ந்த அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு ஹெட் டிஜிட்டல், ஜங்கிபஸ், பிளே கேம்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
பொறுப்பு தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி ஆகியோர்அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த நிலையில் தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜராகினார். அவசர சட்டம் இயற்றப்பட்ட போதிலும் அமலுக்கு வரும் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
எனவே இந்த உபகாரத்தில் வழக்கு தொடர்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என வாதிட்டார். தேதி அறிவிக்காவிட்டாலும் சட்டம் அமலில் உள்ளதாகவே கருதப்பட வேண்டும் என எதிர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து இந்த விவகாரத்தில் வழக்கு தொடர்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறியுள்ளனர். இதனை ஏற்றுக்கொண்ட மனுதாரர்கள் அவசர சட்டம் அமலுக்கு வரும் தேதி அறிவித்த பின் புதிதாக வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் எனக் கூறி அவசர சட்டத்திற்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





