30 அடி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்த பள்ளி வேன்..!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ஓட்டுனர் மதுபோதையில் இருந்ததால் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பள்ளி வேன் 30 அடி ஆழ பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களை இறக்கிவிட்டு வேன் பள்ளிக்கு திரும்பிக் கொண்டிருந்தது.
அப்பொழுது பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேன் ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். பள்ளி மாணவர்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





