வீட்டிற்குள் புகுந்த 14 அடி நீள கருநாகம்..!
கர்நாடகா மாநிலத்தில் வீட்டிற்குள் புகுந்த 16 அடி நில கருநாகப் பாம்பு பிடிபட்டது. சசிராஜ் என்பவரது வீட்டின் பின்புறம் சுமார் 14 அடி நீளம் உள்ள கருப்பு நிற ராஜநாகம் ஒன்று எதையோ வாயில் விழுங்கியபடி கிடந்தது.
இதை பார்த்து அதிர்ந்து போன அவர்கள் உடனடியாக பாம்பு பிடி வீரர் அசோக்குமாருக்கு தகவல் கொடுத்தனர். இதை தொடர்ந்து அங்கு வந்த பாம்பு பிடி வீரர் பாம்பை பிடிக்க முயன்ற பொழுது இரண்டு முறை தாக்க முயன்றது. பின்னர் பாம்பை பிடித்த அசோக்குமார் அதை பத்திரமாக வனப்பகுதியில் விட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





