--- --:--:-- --

ஆம்புலன்ஸ் வாகனம் செல்வதற்காக தனது வாகனத்தை நிறுத்திய பிரதமர் மோடி..!

3

ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் செல்வதற்காக தனது வாகனத்தை நிறுத்தி பிரதமர் மோடி வழிவிட்டுள்ளார். தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் நரேந்திர மோடி ஹிமாச்சலப் பிரதேசம் சென்றார். அங்கு சாலை மார்க்கமாக தேர்தல் பொதுக்கூட்டத்திற்கு சென்ற பொழுது ஆம்புலன்ஸ் வாகனம் வந்துள்ளது.

 

இதையடுத்து தனது பாதுகாப்பு வாகனத்தை ஓரமாக நிறுத்தி ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல வழி விடுமாறு பிரதமர் கூறியுள்ளார். இதனால் பிரதமரின் வாகனம் நிறுத்தப்பட்டது. ஆம்புலன்ஸ் சென்ற பிறகு பிரதமரின் பாதுகாப்பு வாகனம் புறப்பட்டது.

 

சாலை மார்க்கமாக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்று கொண்டிருந்த பொழுது ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று பிரதமரின் வழியில் வந்தது. இதனை அறிந்த பாதுகாப்பு அதிகாரிகள் பிரதமரின் வாகனத்தை சில நிமிடங்கள் நிறுத்தி ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி விட்டனர்.

 

அப்போது பிரதமரை வரவேற்கக் கூடியிருந்த பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். ஆம்புலன்ஸ் கடந்து சென்ற பிறகு பிரதமரின் கார் மீண்டும் புறப்பட்டு சென்றது.

 

Right Menu Icon